;
Athirady Tamil News

3 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல்

0

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் 3 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15இல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

குறித்த கப்பலில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு தற்போதும் இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

ஏல விற்பனை
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக அந்த கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் ஏலமிடப்பட்டுள்ளது.

அந்த இரவு நேர உணவு பட்டியல் கார்டு 70 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83 ஆயிரம் பவுண்ட் (இலங்கை மதிப்பில் 3.3கோடி)அளவிற்கு ஏலம் போயுள்ளது.

இதுதொடர்பாக ஏலதாரரான ஆன்ட்ரூ ஆல்ட்ரிச் கூறுகையில்..

‛கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.

இது அவரது குடும்பத்தினர் உள்பட யாருக்கும் தெரியாது. 2017ம் ஆண்டு அவர் இறந்த பிறகு அவரது உடமைகளை அவரின் மகளும், மருமகளும் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது தான் இந்த டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட மெனுவை பழைய புகைப்பட ஆல்பத்தில் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.