வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் நேற்றையதினம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.
குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.