பிரித்தானிய அமைச்சரவையில் மாற்றம்: முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு செயலாளராக நியமனம்
பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவெல்லா பிரேவர்மேன் நீக்கம்
பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அமைச்சரவையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வந்த பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பிறகு நேற்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போன உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கத்துக்கு பிறகு, பிரித்தானிய அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
இந்நிலையில் சுவெல்லா பிரேவர்மேனுக்கு மாற்றாக ஜேம்ஸ் கிளவர்லி(James Cleverly) பிரித்தானியாவின் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் கிளவர்லி(James Cleverly) முன்னதாக பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்(2010-2016) மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த டேவிட் கேமரூன் பிரித்தானியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கேமரூன் 7 வருடங்களாக தொடர் செயல் அரசியலில் இருந்து வருகிறார்.
அத்துடன் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் இருந்த தன்னுடைய அனுபவங்கள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு சர்வதேச சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என கேமரூன் தெரிவித்துள்ளார்.
அரசின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு தான் உடன்படவில்லை என்றாலும், ரிஷி சுனக் வலிமையான மற்றும் திறமையான தலைவர் என்பது தெளிவாக காட்டுகிறார், அவருக்கு சிறப்பான பாதுகாப்பையும் செழிப்பையும் வழங்க விரும்புகிறேன் என X தளத்தில் கேமரூன் தெரிவித்துள்ளார்.