2026 சட்டசபை தேர்தல்; ‘விஜய் மக்கள் இயக்கத்தின்’ அடுத்த மூவ் – 234 தொகுதிகளிலும்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நூலகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
2026 சட்டசபை தேர்தல்;
அண்மையில் கல்வி விழா ஒன்றை நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, தனது அரசியல் வருகைக்கு விஜய் வலு சேர்த்தார். இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை தொடங்கப்பட்டது.
மேலும், ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் மினி கிளினிக் உள்பட மக்களுக்கு தேவையான பல சேவை மையங்களை விஜய் துவங்கினார். குறிப்பாக அண்மையில் நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில் விஜய்யின் சூசகமான அரசியல் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
234 தொகுதிகளிலும் நூலகம்
மேலும், வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு விஜய் தயாராகி வருகிறார் என்பதும் அவரின் நடவடிக்கை மூலம் தெரியவருகிறது. இந்நிலையில் அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் நூலகம் தொடங்குவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டசபை தேர்தல்;
இந்த நூலகத்தில் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், தமிழர்கள் வரலாறு குறித்த புத்தகங்கள் இடம் பெருகிறதாம். மேலும், தற்போது தனது 68வது படத்தில் நடித்து வரும் விஜய் படப்பிடிப்பு முடிவடைந்ததும், சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி கொடுத்து அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.