2024 வரவு – செலவு திட்ட பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவைகளே : பாட்டலி சம்பிக்க ரணவக்க
இவ்வருட வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இலங்கை முதலில் தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்து, கடன் வழங்குநர்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்.
கொழும்பு வாக்காளர்கள்
இந்தப் பணி நடக்காத வரை இவையெல்லாம் கனவுகள் மட்டுமே.
நாட்டில் நிலவும் நெருக்கடியைப் பார்த்தால், நெருக்கடியில் இருந்து தப்புவது மட்டும் போதாது, பொது மக்கள் மிகவும் ஏமாந்து போகிறார்கள்.” என்றார்.
அத்துடன், கொழும்பு வாக்காளர்களை இலக்கு வைத்து இவ்வருட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அவர். உண்மையில், நாம் சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவை பிரபலமடையலாம், பொதுமக்கள் கைதட்டி பால் சாதம் சாப்பிடலாம்.
ஆனால் பின்னர் அவை மோசமான முடிவுகளாக இருக்கலாம் என விமர்சித்துள்ளார்.