ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துச் சென்ற இஸ்ரேல் வீராங்கனை உயிரிழப்பு!
ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீராங்கனை உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்த 19 வயதான நோவா மர்சியானோ கடந்த அக்டோபர் 7-ம் திகதி கிபுட்ஜ் நஹால் பகுதியில், மற்றவர்களுடன் சேர்த்து அவரை பணய கைதியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர்.
கடந்த திங்கட்கிழமை இரவில், பணய கைதியாக நோவா இருக்கும் வீடியோ ஒன்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட 5 வாரங்களுக்கு பின்னர் நோவா மரணமடைந்த தகவல் வெளிவந்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் நோவாவின் மரணம், உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் உளவு அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டே அவருடைய மரணம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.