‘நீ கிளம்பி வர்ற.. 10 மணிக்கு வந்து நிக்கணும்’ புகைப்பட மிரட்டல் – இளம்பெண் விபரீத முடிவு!
புகைப்பட மிரட்டல் விடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சுனாமி காலனியை சேர்ந்தவர் அபிராமி (24). இவர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அபிராமிக்கும் அதே நிறுவனத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான செல்வம் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணை தன்னுடன் வெளியே வருமாறு செல்வம் அழைத்துள்ளார். ஆனால் அபிராமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், உன்னுடன் வீடியோ கால் பேசியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் தீபாவளியன்று அபிராமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய மரணத்திற்கு செல்வம்தான் காரணம் என்று தற்கொலை கடிதத்தை செல்வத்தின் தொலைப்பேசி எண்ணுடன் குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார்.
பெற்றோர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிராமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்வத்தை பிடிப்பதில் போலீசார் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படும் நிலையில், இறந்த பெண்ணின் சகோதரி செல்போன் மூலம் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது போதையிலிருந்து செல்வம் தன்னுடன் பேசுவது அபிராமி என நினைத்து, ‘நீ கிளம்பி வர்ற… பத்து மணிக்கு வந்துரு. எதுக்கு நம்பர மாத்திக்கிட்டே இருக்க.
எனக்கு நைட் 10 மணிக்கு நீ வந்து நிக்கணும்’ என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் தங்களது மகளின் தற்கொலைக்கு காரணமான செல்வத்தை காவல்துறை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அபிராமியின் பெற்றோர் கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.