முடிவுக்கு வராத கலவரம்; 9 மைத்தேயி இன அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை – என்ன காரணம்?
மைத்தேயி இன அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைத்தேயி இனம்
மணிப்பூர், மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டு,இனக் கலவரமாக மாறி வன்முறையாக வெடித்தது. இதில்,178 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரிவினைவாத மற்றும் வன்முறை செயல்பாடுகள் காரணமாக பல்வேறு மைத்தேயி தீவிரவாத அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
5 ஆண்டு தடை
இந்த அமைப்புகள், மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல் துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் கொலை செய்வதுடன் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டது.
மேலும், மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (ஆர்பிஎப்), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள்படை (எம்பிஏ), காங்லீபாக் மக்கள் புரட்சிகர கட்சி,
அதன் ஆயுதப் பிரிவான சிவப்பு ராணுவம் என்கிற காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை 5 வருடங்களுக்கு தடை செய்வதாக அறிவித்துள்ளது. தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் மெய்தி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குக்கி இனக்குழுவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Ministry of Home Affairs today declared the Meitei Extremist Organisations-the Peoples’ Liberation Army (PLA) and its political wing, the Revolutionary Peoples’ Front (RPF), the United National Liberation Front (UNLF) and its armed wing the Manipur Peoples’ Army (MPA) as unlawful… pic.twitter.com/cllk1qPKR0
— ANI (@ANI) November 13, 2023