இலங்கையில் புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி!
இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார்.
இதேவேளை, புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.
உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும்.
வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர்.
தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.
இதேவேளை, அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் போகிறது.
தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வெட் வரியை அறவிடப்போகின்றனர்.
இருப்பினும், இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.