;
Athirady Tamil News

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ராஜபக்ச சகோதரர்கள்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற கட்டணமாக மனுதாரர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் செலுத்த வேண்டும் என அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், அந்த முடிவு அதை விட வலுவான அரசியல் அறிக்கையாக இருந்தது.

அதன் மூலம், ராஜபக்ச ஆட்சி நாட்டிற்கு கடுமையான அழிவு பற்றிய முடிவை வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.

பொருளாதார நெருக்கடி
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்து, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, ராஜபக்சர்கள் விமான பயணங்கள் மேற்கொள்ள கூட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சில சமயங்களில் அதை தளர்த்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்தனர்.

எனினும் இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று விசேட செய்திகளை வெளியிட்டிருந்தன.

பல சர்வதேச ஊடகங்கள் இதனை தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது.

சர்வதேச செய்தி வலையமைப்புகள்
பிபிசி உலகச் சேவையும் தனது மாலைச் செய்தியில் இது பற்றிய விவரங்களை அளித்ததுடன், 2022ஆம் ஆண்டு போராட்டத்தை பற்றியும் நினைவூட்டியது.

இதேவேளை, பல சர்வதேச செய்தி வலையமைப்புகள் மற்றும் இணையத்தளங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.

குறிப்பாக நேற்றைய தினம் இந்தியாவின் அச்சு ஊடகங்களில் இது பற்றிய செய்திக்கு அதிக இடம் கிடைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.