ஹமாஸின் பாராளுமன்ற கட்டிடம்: சுக்குநூறாய் சிதைத்த இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேலிய ராணுவம் அதனை முற்றிலுமாக வெடி வைத்து அழித்துள்ளது.
ஹமாஸ் பாராளுமன்றம் கைப்பற்றல்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தை இரு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலஸ்தீன சட்டசபை கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில், துப்பாக்கிகள் மற்றும் கொடிகளுடன் இஸ்ரேலிய துருப்புகள் நிற்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது.
ஆனால், இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை இன்னும் நிறுவப்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
சுக்குநூறாய் சிதறிய ஹமாஸ் பாராளுமன்றம்
இந்நிலையில் ஹமாஸ் நாடாளுமன்ற கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் வெடி வைத்து சிதைத்துள்ளது.
மேலும் ஹமாஸ் நாடாளுமன்ற கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவம் வெடி வைத்து சுக்குநூறாய் சிதைக்கும் வீடியோவும் வெளியிட்டுள்ளது.
காசாவின் பாராளுமன்ற கட்டிடத்தை IDF-யின் 7 வது கவச படையணி மற்றும் கோலானி காலாட்படை சில தினங்களுக்கு முன்பு கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
The Hamas parliament building was demolished
Several days after IDF published photo inside the parliament building in Gaza, the military has demolished the site.
The building was captured by the 7th Armored Brigade and Golani Infantry Brigade.
— NEXTA (@nexta_tv) November 15, 2023