;
Athirady Tamil News

கோப் குழுவின் தலைவரின் மகன் விசாரணைக் குழுவில்: வலுக்கும் எதிர்ப்பு

0

நிலையியற் கட்டளையின் பிரகாரமே கோப் குழுவின் தலைவரின் மகன் விசாரணைக் குழுவில் பங்குபற்றியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (16.11.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழுவில் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கோப் தலைவரின் மகனுக்கு, கோப் குழுவில் அமருவதற்கான உரிமை என்ன என்று பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

சஜித் பிரேமதாச

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காருக்கும் பின்னால் மற்றொரு நபர் அமர்ந்திருப்பதை கோப் குழு புகைப்படங்களில் பார்த்தோம்.

எனக்கு அவரைத் தெரியாது. எனக்கு வெளி நாட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. கோப் தலைவரின் மகன் கனிஷ்க பண்டார எப்படி கோப் குழுவில் அமர்ந்திருக்க முடியும் என்று.

எனக்கு கோப் குழுவுக்கு சென்று இது தொடர்பில் கேள்வியெழுப்ப முடியாது. ஆனால் கோபாவில் நான் அமர்ந்து பேச அனுமதிக்கப்பட்டேன்.

கோப் குழு தலைவரின் மகனுக்கு, அங்கு வர என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்க விரும்புகிறேன். எந்த அடிப்படையில் அவர் அங்கே அமர்ந்தார்?

கோப் குழுவின் தலைவராகப் பணியாற்றும் ரஞ்சித் பண்டார கண்டி கிரிக்கெட் பல்கலைக்கழக திட்டத்தின் ஆலோசகர்களில் ஒருவராகச் செயற்பட்டிருக்கிறார்.

அதற்குரிய முழு ஆவணங்களையும் நான் ஹன்சார்ட்டில் சமர்ப்பிக்கிறேன்.

அவருக்கு இன்னும் கோப் குழுவின் தலைவராக கிரிக்கெட் பற்றிய விசாரணைகளில் செயற்பட முடியுமா? அவருக்கு தொடர்ந்தும் கோப் குழுவின் தலைவராகச் செயற்பட முடியுமா?

இலங்கை கிரிக்கெட் பயிற்சி நிலையத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கான ஆலோசனை நிறுவனமாக கொழும்பின் வர்த்தக முகாமைத்துவ பாடசாலையை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் தலைமை அதிகாரி யார்? இதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார.

இலங்கை கிரிக்கெட்டின் பயிற்சி மையத்தில் பணிபுரியும் அவரை எப்படி நியமிக்க முடியும்.

மஹிந்த யாப்பா அபேவர்தன
வெளியாள் ஒருவருக்கு கோப் குழுவில் அமர உரிமை இல்லை.

ஆனால் தனது செய்தி செயலாளரிடம் தனது மகன் என்று அவர் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச
நானும் ஒரு பொதுமக்கள் உறுப்பினர். நான் எதிர்க்கட்சித் தலைவர். நான் செயலாளர்களை அழைத்துக்கொண்டு கோப் குழுக்களுக்கு செல்லலாமா?

என்னால் கோப் குழுவில் பேச முடியாது.

மஹிந்த யாப்பா அபேவர்தன
அந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்காதது தவறு.

பிரசன்ன ரணதுங்க
அவர் குற்றம் சுமத்தும் உறுப்பினர் இந்த சபையில் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத போது அவரைப் பற்றி பேசுவது முறையல்ல.

அவர் முன்வைத்தார், நீங்கள் பதில் அளித்தீர்கள். இதுவே அடிப்படை பணியாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் சம்மதித்தால், சிறப்புரிமையாகக் கேளுங்கள். சிறப்புரிமைக் குழுவில் இணைந்துக்கொள்ளுங்கள்.

சபாநாயகரே நாம் அடிப்படைப் பணிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சஜித் பிரேமதாச
இந்தக் குழுக்களில் யாருடைய மகனாவது வந்து உட்கார முடியுமா? அப்படிப்பட்ட தலைவர் தலைமையிலான குழு இலங்கை கிரிக்கட்டைப் பற்றி கேள்வி கேட்க முடியுமா என்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரே பதில் கூறுங்கள்.

பிரசன்ன ரணதுங்க
நிலையியற் கட்டளையின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இல்லாவிட்டால் நாட்டுக்கு தவறு செய்துவிட்டோம் என்ற தவறான எண்ணம் ஏற்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.