;
Athirady Tamil News

மௌலவியின் சர்ச்சைக் கருத்து! காவல்நிலையத்தில் முறைப்பாடு

0

சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மௌலவிக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் ஆசிரியர்கள் நடனமாடியமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட மௌலவி அப்துல் ஹமீட், பரதநாட்டியம் தொடர்பாகவும் தமிழ் மக்களது கலை மரபு தொடர்பாகவும் அவதூறாக பேசியுள்ளதுடன், ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

மெளலவிக்கு எதிரான கருத்துக்கள்
இது தொடர்பில் மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கல்லூரி மாணவர்கள் இன்றையதினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்ததுடன், பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குறித்த மௌலவிக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் மெளலவிக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மௌலவியின் கருத்து சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்டபில் நடவடிக்கை எடுக்குமாறும் பௌத்த இந்து சங்கத்தின் தலைவர் ம.மயூரதனால் இன்று வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.