சீன நிலக்கரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து : 20க்கும் மேற்பட்டோர் பலி
சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் முதன்மையான நிலக்கரி உற்பத்தி மையமான ஷாங்சியில் உள்ள நான்கு மாடிகள் கொண்ட யோங்ஜு நிலக்கரி தொழில்துறை கட்டடத்தில் நேற்று (16) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் ஷாங்க்சி மாகாணம் என்பது சீனாவின் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.