யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பற்றரியை திருடிய காரைநகர் வாசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினர்
நல்லூர் ஆலயத்திற்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்ற நிலையில், நல்லூர் ஆலய வளாகத்தில் பக்தர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் இருந்து பற்றியை திருடியவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடி முச்சக்கர வண்டியின் பற்றரியினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் காரைநகர் பகுதி சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நூதனமான திருட்டுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.