ரணில் விக்ரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது : அசோக பிரியந்த புகழாரம்
ரணில் விக்ரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாதென பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய வருமான வழிமுறைகளை உருவாக்க கூடியதுமான வரவு – செலவுத் திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. அது தொடர்பிலான பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அரசாங்க ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பால் மாத்திரம் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது.
எதிர்க்கட்சியில் கனவு
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அடுத்த வருடத்தின் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் கிரிக்கெட் தொடர்பிலான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்படுத்தப்படுகின்றமை கவலைக்குரியது. அரச தரப்பினர் அந்தத் தவறுகளைச் செய்யவில்லை.
எதிர்க்கட்சியில் இருப்போர் அளவற்ற சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்று கனவு காண முடியும். ஆனால், அரசை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதைப் போன்று இலகுவான விடயமல்ல.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினரின் பொய் பித்தலாட்டம்.” எனவும் தெரிவித்தார்.