;
Athirady Tamil News

சர்வதேச கருத்தரங்கில் சாணக்கியன் பங்கேற்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் பிரேஸிலில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் பங்கேற்றிருந்தார்.

கிளப் டி மாட்ரிட் ‘Club De Madrid’ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவகார திட்டத்தின் ஓர் பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த இக் கருத்தரங்கானது “இளம் முடிவெடுப்பவர்களின் கொள்கை ஆய்வக வலையமைப்பு 2023” என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் உலகளவில் அரசியல் அரங்கில் தாக்கம் செலுத்தும் 35 வயதிற்கு குறைவான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர் .

செயலமர்வு
குறித்த கருத்தரங்கில் பல நாடுகளின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் பங்கேற்றிருந்ததுடன் மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச ரீதியலான ஓர் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது இவ் செயலமர்வின் முக்கிய கருப்பொருளாக அமைந்துள்ளது. இலங்கை சார்பான குழுவில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க மற்றும் இரா. சாணக்கியன் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமர்வின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவியான மிசேல் பசிலேவை சாணக்கியன் சந்தித்திருந்ததுடன் இலங்கை தொடர்பான அறிக்கைகள் பல இவரது காலத்தில் வெளியிடப்படிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.

அவை தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கைக்கான பிரேசில் தூதுவருடன் ஓர் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது இலங்கையில் இருக்கும் கால்நடைகளுக்கு இயற்கையாவே அமைந்த மேய்ச்சல் தரவெளிகளான மயிலத்தமடு மாதவனை போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள அபகரிப்புகள் தொடர்பிலும் எமது கால்நடைகளை வளர்ப்பினை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் மற்றும் கால்நடை பால் உற்பத்திகளை அதிகரிக்க தேவையான நவீன உபகரணங்கள் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியானது பிரேசில் நாட்டில் மிகப் பாரிய பொருளாதாரமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.