சிரிய அதிபருக்கு பிடியாணை : பிறப்பித்தது பிரான்ஸ்
சர்வதேச சமூகத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிரிய குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டி, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், அவரது சகோதரர் மற்றும் இரண்டு மூத்த சிரிய அரசாங்க இராணுவ அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச கைது பிடியாணையை பிறப்பித்துள்ளது.
அசாத் தவிர, அசாத்தின் சகோதரர் மஹிர் மற்றும் சிரிய அரசாங்க இராணுவ ஜெனரல்கள் கஷான் அப்பாஸ் மற்றும் பஸ்சம் அப் ஹாசன் ஆகியோருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி
2013ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, அதிபர் ஆசாத்தின் அறிவுறுத்தலின் பேரில், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிரிய அரசுப் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சர்வதேச சிவில் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இரசாயன ஆயுதத் தாக்குதலால் சிரியாவின் டோரம் நகரில் ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாக சிவில் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.