நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை : பிரசன்ன ரணதுங்க
“ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். மேலும், 88/89 இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வங்கிக் கொள்ளை, கொலைகள் என வழக்குப் பதிவு செய்தால், அவை பொருளாதாரத்தையும் பாதித்ததாகச் சொல்லப்படும். எனவே இதைப் பற்றி தவறாகச் சொல்ல வேண்டாம்.”
இவ்வாறு, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது, இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுகின்றன.
தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துகின்றன.
யாருக்கும் உரிமை இல்லை
இது நாட்டுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதித்துறையும் விமர்சிக்கப்படுகிறது.
சாதகமான முடிவு கிடைத்தால் அதை வெளியில் காட்ட முயல்கின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாக மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க எங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை.” என்றார்.