பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவுகள்
பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு உணவு முதலான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விடயங்களை வழங்கியதாக கூறியுள்ளது.
வறுமையில் வாடும் பெண்கள்
மேற்குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தனியாக வாழ்பவர்களாகவும், 25.7 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி குழந்தையை தனியாக வளர்க்கும் தாய்மார்களெனவும், 20.9 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி தனியாக வாழும் பெண்களெனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, 52 சதவிகிதத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது 57.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முழு நேர வேலையில்லாத ஒரு கூட்ட மக்களை, பிரான்ஸ் அரசு “செயல்படாதவர்கள்” என அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.