முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி; 21வரை மழை பெய்யும் வாய்ப்பு
முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை வட கிழக்கில் இன்று தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வரும் நிலையில், இம்மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.