வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நடந்து முடிந்த ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கடினமாக இருந்ததென சிலர் கூறினாலும், பெரும்பான்மையான மாணவர்கள் அந்த வினாத்தாளுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மாணவர்கள் வினாத்தாளில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சித்தியடைந்துள்ள மாணவர்கள்
அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சரியான பெறுபேறுகளை வெளியிட்டதற்காக பயன்படுத்தப்பட்ட முறையையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன் போது தெளிவுப்படுத்தியுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 32 ஆயிரத்து 949 மாணவர்களில் 50,664 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் மதிப்பெண் பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் அவர்களில் 20,000 மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் தலா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.