களனி விகாரையில் பாவ மன்னிப்பு
இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்களே காரணமெனவும் அவர்கள் அதற்கு பொறுப்பு கூற வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் இந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோரவேண்டுமென தெரிவித்துள்ளார் ஊடகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன.
கோட்டாபயவின் காலத்தில்
கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த காலத்திலேயே இந்த நாடு பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குள் சென்றதும் அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிங்கள மக்கள் அவருக்கெதிராக போராட்டம் நடத்தியதும் சர்வதேசத்திற்கே தெரிந்த விடயம்.
இவ்வாறு போராட்டம் நடத்திய சிங்கள மக்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் நாடு நாடு நாடாக பாதுகாப்பு தேடி ஓடியதும் அனைவருக்கும் தெரியும்.
அவர் பாதுகாப்புக்காக நாடு,நாடாக ஓடிய போதிலும் தன்னை தெரிவு செய்த 69 இலட்சம் சிங்கள மக்கள் உட்பட அனைவருக்கும் துரோகம் செய்துவிட்டே ஓடினார்.
மக்களை நாளாந்தம் உணவிற்கும் எரிபொருளுக்கும் எரிவாயுவிற்கும் நீண்ட வரிசையில் நிற்க வைத்த பெருமை அவரையே சாரும்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்
தமிழ் மக்களுக்கெதிரான இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோரை கொல்ல காரணமான அவரும் அவரது சகோதரர்களும் இப்படித்தானா களனி விகாரையில் மன்னிப்பு கோரினார்கள்..!
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இன்றும் அங்கவீனமாக உள்ளவர்களுக்கு பிரதியுபகாரமாக களனி விகாரையில் மன்னிப்பு கேட்கலாம்
அப்படியென்றால் இலங்கையில் நீதித்துறை எதற்கு.அனைவரும் குற்றம் செய்துவிட்டு களனிவிகாரையில் போய் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடும்தானே
அது சரி நீதிபதிக்கே அச்சுறுத்தல் விடுத்து அவரை நாட்டை விட்டே வெளியேற்றியவர்களுக்கு இது என்ன பெரிய விடயமா..!
அதற்கும் சேர்த்து களனி விகாரையில் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடும்