இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு!
மாலைதீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸு அதிகாரபூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முகமது முய்ஸு மாலைதீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.
சீன ஆதரவு நிலைப்பாடு
இந்தச் சந்திப்பின் போதே முகமது முய்ஸு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தற்போது மாலைதீவு அதிபராக உள்ள முகமது முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார்.
அவர் தேர்தல் பிரசாரத்தின் போதே இந்திய இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புவிசார் அரசியலில் முக்கிய நாடு
தேர்தல்சயம் மாலைதீவில் இருக்காது. தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். இதில் எந்தவொரு நாடும் தலையிடக் கூடாது” என சூளுரைத்திருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் பிரசார சமயத்தில் அவர் இந்தியாவை நேரடியாகக் குறிப்பிடாமல், “எந்தவொரு நாட்டின் இராணுவமும் நிச்அமைந்துள்ள தீவு நாடு மாலைதீவு. இது நிலப்பரப்பு அடிப்படையில் குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.