தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல்: உக்ரைன் கடல் சுரங்கத்தில் மோதி விபத்து
தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல் உக்ரைனிய துறைமுக பகுதிகளில் உள்ள சுரங்கத்தில் மோதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானிய கப்பல் சேதம்
லைபீரியன் கொடியிடப்பட்ட பிரம்மாண்டமான சரக்கு கப்பல் தானியங்களை ஏற்றிக் கொண்டு யுஷ்னி துறைமுகத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
கடல் போக்குவரத்து அமைப்பின் கூற்றுப்படி, தானியங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு கப்பல் ரோமானிய துறைமுகமான கான்ஸ்டன்டாவை நோக்கி சென்று கொண்டு இருந்தது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
A ship carrying grain hit a sea mine off the Ukrainian coast, Reuters has quoted a source in the Ukrainian government as saying
It is a Liberian-flagged bulk carrier Georgia S, which left the port of Yuzhny with a cargo of grain. According to MarineTraffic, the grain carrier was… pic.twitter.com/wGqoLpxwEL
— NEXTA (@nexta_tv) November 18, 2023
இந்நிலையில் தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற பிரம்மாண்ட சரக்கு கப்பல் உக்ரைனிய துறைமுக பகுதிகளில் உள்ள கடல் சுரங்கத்தில் மோதியதாக உக்ரைன் அரசு தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த விபத்தில் கப்பலுக்கு லேசான பாதிப்புகளே ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைபீரிய கொடியிடப்பட்ட சரக்கு கப்பலின் பெயர் ஜார்ஜியா எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.