அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு வழங்கப்படுவதை சிலர் விமர்சித்தனர்.
எனினும் இந்த யோசனை நியாயமானதென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்திற்கு பாதிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதன் அடிப்படையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரிப்பதன் மூலம், பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.