சீனி தட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு
நாட்டில் 19000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெரணியகலவில் இன்று (19.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எனவே சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனி மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு
அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சீனி மற்றும் அரிசி கொள்வனவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழலிலேயே சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.