மாலத்தீவில் ஏன் இந்திய ராணுவம்; வெளியேற கூறும் அதிபர் – என்ன சிக்கல்!
தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசிடம் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய ராணுவம்
மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்திய சார்பில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுடனான அதிபர் முகமது மூயிஸ் சந்திப்பு குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்,
அதிபர் வேண்டுகோள்
‘மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும்” என இந்தச் சந்திப்பின்போது அதிபர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசிய அதிபர், நடைபெற்ற அதிபர் தேர்தலில், மாலத்தீவு மக்கள், இந்தியாவிடம் வலுவான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றனர், மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்தை இந்தியா மதிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக, இந்திய போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏதுவாக இருக்கிறது.
இந்தியா ராணுவ வீரர்களின் இந்த சிறிய குழு பல ஆண்டுகளாக மாலத்தீவில் நிலைகொண்டிருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு, பல மருத்துவ அவசர காலங்களில் இந்திய ஹெலிகாப்டர்கள் உதவியதையும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.