;
Athirady Tamil News

திருவாசக கட்டுரைப்போட்டி 2023

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறையும், தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்தும் “திருவாசக கட்டுரைப்போட்டி 2023” டிசம்பர் 25 ம் திகதியன்று இடம்பெறவுள்ள மார்கழி பெருவிழாவினை முன்னிட்டு மாணவர்களிடையே சைவ சமய அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்குடன் சிவத்தமிழ் வித்தகர் சிவமாகாலிங்கம் ஐயாவின் நினைவாக நடாத்தப்படவுள்ளது.

தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் தலைப்பில் 700 சொற்களில் கட்டுரை அமைய வேண்டும்.

பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு “மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்” எனும் தலைப்பில் 1000 சொற்களில் கட்டுரை அமைய வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக தமது சுய ஆக்கம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வித்துறை மாணவர்கள் தமது கல்வி நிறுவன அடையாள அட்டை பிரதியினை இணைத்து அனுப்பவும்.

கட்டுரைகள் டிசம்பர் 05ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம், தென்னாடு வீதி, கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும். போட்டி தொடர்பிலான மேலதிக விபரங்களை 0707701111 இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.