;
Athirady Tamil News

வட்டுவாகல் பாலத்தின் ஆபத்தான நிலை; பயணிப்போர் அவதானம்!

0

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றதனால் பாலத்தினூடாக பயணிப்போர் ஆபத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யவேண்டிய நிலை
குறித்த பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்கின்றது. இவ்வாறான நிலையில் பாலத்தின் ஊடாக கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பல விபத்துகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மழைகாலங்களிலும் பிரயாணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யவேண்டிய நிலை காணப்படுவதாக வட்டுவாகல் பாலத்தினூடாக பயணிப்போர் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.