கரீபியன் நாடு ஒன்றை சூழ்ந்த மழை வெள்ளம்: 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள பாதிப்பு
கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இதனால் சாலைகள் மற்றும் பிற பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது, மேலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் மின் இணைப்பு மற்றும் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 13,000 மக்கள் இந்த வெள்ளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதுகாப்பிற்காக வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
21 பேர் உயிரிழப்பு
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து செயல்பட்டு இதுவரை 2,500 பேரை அவசர கால மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
இருப்பினும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலையில் சுரங்க பாதையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Crazy scenes unfolding in #DominicanRepublic
Torrential rains triggered a wall collapse at the end of a tunnel in Maximo Gomez Avenue in #SantoDomingo smashing several vehicles!
No information so far about any passengers in the cars. Prayers for everyone’s safety 🙏🏽… pic.twitter.com/Sg1XyaNSmr— Earth42morrow (@Earth42morrow) November 19, 2023