ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம்: உடனடியாக மக்கள் வெளியேற்றம்
ஹப்புத்தளை – தங்கமலை தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய பள்ளத்தின் காரணமாக அப்பிரதேசத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த திடீர் பள்ளமானது நேற்று (20.11.2023) உருவாகியுள்ளது.
பள்ளம் உருவாகியதற்கு அருகில் உள்ள வீடொன்றில் வளரும் நாய் ஒன்று குரைத்ததை அடுத்து அங்கு சென்ற அப்பகுதியினர் பள்ளம் இருப்பதை அவதானித்துள்ளனர்.
31 குடும்பங்கள் வெளியேற்றம்
இது தொடர்பில் தோட்ட அத்தியட்சகர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்து 31 குடும்பங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த குடும்பங்களை பிரதேசத்தின் தோட்டப் பாடசாலையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.