டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! தேர்தல் வெற்றிக்கு பிறகு துள்ளாட்டம் போட்ட புதிய பிரதமர்
அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
ஜேவியர் மிலி வெற்றி
அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவல்படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
#Argentina‘s new president Javier Milei celebrates his election victory
— NEXTA (@nexta_tv) November 20, 2023
இந்நிலையில் தனது வெற்றியை அர்ஜென்டினா நாட்டின் புதிய பிரதமர் துள்ளல் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இனி டாலர் தேசம்
ஜேவியர் மிலி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அர்ஜென்டினாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஜேவியர் மிலி தனது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய உறுதியை வழங்கி இருந்தார், அதில் முதலாவது அர்ஜென்டினா இனி டொலர் தேசம், மற்றொன்று மத்திய வங்கி நீக்கம்.
அர்ஜென்டினாவின் தற்போதைய பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் நிலையில், அர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு அமெரிக்க டொலரை அதிகாரப்பூர்வ பணமாக ஜேவியர் மிலி அறிவிக்கயுள்ளார்.
Fuertes declaraciones de Javier @JMilei sobre las empresas públicas: “Todo lo que pueda estar en manos de privados, estará en manos de privados” pic.twitter.com/Nyu4h6P0ZC
— Marcelo Bonelli (@BonelliOK) November 20, 2023
இவை அர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மேலும் அர்ஜென்டினாவை டொலர் தேசமாக மாற்ற அந்த நாட்டின் மத்திய வங்கியை மூடுவதாகவும் ஜேவியர் மிலி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.