;
Athirady Tamil News

ஊழல் வழக்கு: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்

0

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

53 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 31ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் இம்மாதம் 28ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது சந்திரபாபு நாயுடுவின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளதற்கான மருத்துவ சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சந்திரபாபு நாயுடுவுக்கு வழக்காம ஜாமின் (Regular Bail) வழங்கி உத்தரவிட்டார். நவம்பர் 28-ஆம் தேதி வரை சந்திரபாபு நாய்டு, இடைக்கால ஜாமீனில் இருப்பதால், 29ஆம் தேதியில் இருந்து அவர் அரசியல் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.