;
Athirady Tamil News

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நிறுத்தம்

0

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல் (John Player Gold Pro Cool) ஆகிய சிகரெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், குறித்த சிகரெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிகரெட்டுகளை காட்சிப்படுத்தியிருந்தால்,அவற்றை அகற்றுமாறும் இலங்கை புகையிலை நிறுவனம், சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து
இதேவேளை, மேற்படி சுவையூட்டும் புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பாக புகையிலை தொடர்பான தேசிய அமைப்பான நாட்டா(NATA) அமைப்பு தொடுத்திருந்த வழக்குகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம், தனது தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தீர்ப்பு வாய்மொழியாக வழங்கப்பட்டதாகவும், அது தீர்ப்புக்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி இது தொடர்பில் நீதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.