இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னால் உண்மையில் அந்த நாடு: உடைத்துப் பேசிய உக்ரைன் ஜனாதிபதி
உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விருப்பம்
உலக நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலானது ரஷ்யாவின் விருப்பம் என்றார்.
மூன்றாம் உலகப் போர் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கில் பெரிதாக ஆர்வகம் இல்லாத சீனா, ரஷ்யாவை தூண்டி விடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் எதுவும் எளிதானதாக இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் உலகப் போரின் இந்த உலகளாவிய அபாயங்களின் மையத்தில் உக்ரைன் இன்று உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,
அமெரிக்காவும் சீனாவும் நடவடிக்கை எடுக்கும் வரையில் ரஷ்யா துணிந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார். ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல் கூட ரஷ்யாவின் விருப்பம் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
ஹமாஸ் படைகளுக்கு பயிற்சி
ஈரான் ஆதரவுடன் நடந்த செயல் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஹமாஸ் படைகளுக்கு ரஷ்யா பயிற்சி அளித்துள்ளதாக வெளியான வதந்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
சிரியா, லெபனான் நாடுகளில் ரஷ்ய அதிகாரிகள் பயணப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் படைகளுக்கு பயிற்சி அளிக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பின் துவக்க நாட்களில் பலமுறை கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் கொரோனா தொற்று பாதிப்பு போல என்றார். குறைந்தது 6 முறையேனும் தம்மீது கொலை முயற்சிகள் நடத்தப்பட்டது என்றார்.