குளிர்காலங்களில் நண்டு சூப் குடிக்கலாமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக காலங்கள் மாறும் பொழுது சாப்பிடும் உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்ய தவறும் பொழுது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்த வகையில் மழைக்காலம் வந்த பின்னர் நண்டு சாப்பிடலாமா? அதனால் ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமா? என பலருக்கும் யோசனை இருக்கும்.
நண்டுகளில் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் மீன்கள் போல் மிகுந்த ஆரோக்கியத்தில் இருக்கும் உணவுகளில் இதுவும் ஒன்று.
நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
குளிர்காலங்களில் நண்டு சாப்பிடலாமா?
1. நண்டுகளில் குறைந்த அளவு கொழுப்பும், கூடியளவு புரதமும் இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது. அத்துடன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
2. மாரடைப்பு அபாயம் கொண்டவர்கள் அதிகமாக நண்டு வகைகளை சாப்பிடலாம். ஏனெனின் நண்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம்-புரதம் ஆகியன இருக்கின்றன. இவை கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.
3. மூளையின் ஆரோக்கியம், வளர்ச்சி ஏற்படும் பாதிப்பு இவற்றை எதிர்த்து போராடும் உணவாக நண்டு பார்க்கப்படுகின்றது.
4. பற்களில் வலுவில்லாமல் கஷ்டப்படுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நண்டு சூப் குடிக்கலாம். ஏனெனின் நண்டு பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது.
5. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மேம்பாடு மனிதர்களுக்கு அவசியமாகும்.