PATANJALI நிறுவனத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஆகவே அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் உள்ள அமர்வில் இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த அபராதமானது ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இனி வரும் காலங்களில் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடும் போது கட்டாயம் உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவுயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.