காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து வரும் போரை அடுத்த நான்கு நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதியில் இருந்து மோதல் நடைபெற்று வருகின்றது.
இதில் இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 11,500க்கும் மேற்பட்டோரும் உயிரிழக்கப்பட்டனர்.
காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தரைவழித் தாக்குதலை நடத்தி வந்தது.
இந்த போரினால் காசா மக்கள் உணவு தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் பயங்கரவாததிற்கு எதிரான போரை 4 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேல் கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.