கனடா மக்களுக்கு மீண்டும் விசா : இந்தியாவின் அதிரடி முடிவு
கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் வழங்க இந்தியா முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக ஏஎன்ஐ ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா குடிமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக இ-விசா வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா குடிமக்களுக்கான மின்னணு விசா சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இருநாடுகளிடையே அதிகரித்த பதட்டங்கள்
முன்னதாக செப்டம்பரில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்த பதட்டங்கள் மற்றும் இரு நாடுகளிலிருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றங்களை என அடுத்து அடுத்து நடந்த செயல்பாட்டு காரணங்களால் கனடா நாட்டு மக்களுக்ளுக்கான விசா சேவையை செப்டம்பர் 21 அன்று இந்தியா நிறுத்தியது.
தலைவர்கள் சந்திப்பிற்கு முன்னர்
இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையிலான சந்திப்புக்கு முன்னர் இந்த விசா வழங்கும் செய்றபாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.