;
Athirady Tamil News

கனடா – அமெரிக்க எல்லையில் கார் வெடிகுண்டு தாக்குதல்: மூடப்பட்ட நயாகரா எல்லை

0

கனடா – அமெரிக்கா எல்லையை இணைக்கும் Rainbow பாலம் அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து நெருப்பு கோளமாக மாறிய சம்பவம், தற்போது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதிகாரிகள் தரப்பு விசாரணை
குறித்த சம்பவத்தை தொடர்ந்து Rainbow பாலம் மூடப்பட்டதுடன், நயாகரா எல்லையும் மூடியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உள்ளூர், மாகாண அதிகாரிகள் மற்றும் பெடரல் விசாரணை அதிகாரிகளும் இந்த வழக்கில் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.

நியூயார்க் ஆளுநர் Kathy Hochul தெரிவிக்கையில், Rainbow பாலம் அருகாமையில் நடந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

ரெயின்போ பாலம் இரு திசைகளிலும்
அரசு முகமைகள் சம்பவயிடத்தில் உள்ளன, உதவ தயாராக உள்ளதாகவும் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஒன்ராறியோ காவல்துறை முக்கிய அதிகாரி தெரிவிக்கையில், மிக முக்கியமான சம்பவம் நடந்துள்ளது.

தற்போது ரெயின்போ பாலம் இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. நயாகரா பிராந்திய காவல்துறை, நயாகரா பார்க்ஸ் காவல்துறை மற்றும் கனடா எல்லை சேவைகள் ஆகியவை சம்பவப் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ள என்றார்.

இதனிடையே, கனடா பிரதமர் அலுவலகத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.