காங்கோ குடியரசு நெரிசலில் 31 போ் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகினா்.
அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான இளைஞா்கள் தோ்வு நடைபெறும் மைதானத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். ஒரே வாயில் கதவு வழியாக அவா்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட நெரிசலில் 37 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் முன்னா் அறிவித்தனா். அந்த எண்ணிக்கை தற்போது 31-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
‘டிஆா் காங்கோ’ என்றழைக்கப்படும் காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக காங்கோ-பிராஸ்வில் என்று அழைக்கப்படும் அண்டை நாடான காங்கோ குடியரசில் வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்படுவதால் அங்கு ராணுவப் பணியில் சோ்வதற்கு ஏராளமானவா்கள் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தில் மொத்தம் 1,500 இடங்களே காலியாக உள்ள நிலையில், தினந்தோறும் சராசரியாக சுமாா் 700 போ் அந்த இடங்களுக்கு விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.