நெருங்கிய இறுதிகட்ட பணிகள்; 41 பேர், திக்திக் நிமிடங்கள் – இன்னும் 2 மணி நேரம்தான்!
தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை மீட்பு படையினர் நெருங்கிவிட்டனர்.
சுரங்க விபத்து
உத்தராகண்ட், சிக்யாரா – பார்கோட் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. திடீரென சுரங்கம் இடிந்து விழுந்து நுழைவு வாயிலில் பாறைகள் சரிந்து மூடியதால் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
6 அங்குல பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கி, ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டன.
இறுதிக்கட்டம்
மீட்பு பணியில் பெரும் சவால் இருப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் நலமாக இருக்கும் வீடியோ வெளியாகி சற்று நிம்மதியை அளித்தது. மொத்தம் உள்ள 57 மீட்டரில் 45 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Rescue operation underway at the Silkyara tunnel to rescue the 41 trapped workers pic.twitter.com/kJMIu1fuuG
— ANI (@ANI) November 23, 2023
துளையிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுரங்கத்திற்குள் சென்றனர். இதனால் அனைவரும் 1 முதல் 2 மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.