;
Athirady Tamil News

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும், வருடாந்த பொதுக்கூட்டமும்

0

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான தலைவராக ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உதவி முதல்வர் எம்.எச்.எம். மன்சூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாக சபை தேர்தலும் சாய்ந்தமருது தனியார் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான நிர்வாகசபையின் பிரதித் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவர்களாக மட்டக்களப்பு மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் தலைவர் எஸ். ராஜேந்திரன், அம்பாறை மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் எம்.ஏ.எஸ்.பி. முனசிங்க, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஏ.எம். அன்ஸார், சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எல். சுலக்சன், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஏ. எட்வார்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச்செயலாளராக இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் ஆசிரியர் அலியார் பைஸர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் பொருளாளராக தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் கே. சுரேஸும், பிரதி செயலாளராக காத்தான்குடி மத்திய கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.எம். சஜானும், உதவி செயலாளராக அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலய ஆசிரியர் ஜெ. பஸ்மீரும், பிரதி பொருளாளராக மூதூர் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆசிரியர் ஏ.எச்.வை. அரபாத்தும், உதவி பொருளாளராக அம்பாறை மாவட்ட வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவர் நிமால் அபேவிக்ரம வும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்கு பரிசோதகர்களாக சம்மாந்துறை கோரக்கர் மகா வித்தியாலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். சக்கி மற்றும் லங்கா ஐ.ஓ.சி. கல்முனை முகாமையாளர் ஈ.எம். நௌஸர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் சட்ட ஆலோசகர்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் முன்னாள் தலைவர் வி. வினோபா இந்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சபையோரால் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.