வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பெரும் சோகம்
வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த வீதியில் தாஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவன்
நேற்று (23) மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளது.
உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.