இஸ்ரேல் போர் நிறுத்தம் இன்று முதல் ஆரம்பம்!
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலால் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு நாள் காசா போர்நிறுத்தம் ஏழு வாரப் போருக்குப் பிறகு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் நிறுத்தம் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்தம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படவிருந்தாலும், சில தடைகள் காரணமாக அது தாமதிக்கப்பட்டிருந்தது.
பணயக்கைதிகள் விடுவிப்பு
இதன் போது, பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பெண்களும் சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், காசாவில் உள்ள 39 பலஸ்தீனிய பணயக்கைதிகள் இன்று மாலை 4 மணியளவில் விடுவிக்கப்படவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பெயர் பட்டியல் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தொடக்கம் எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சிறைச்சாலைகளில் உள்ள 150 பலஸ்தீனியர்களை விடுவிப்பதாக இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.