நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்: காரணத்தை வெளிப்படுத்தும் பேராசிரியர்
ஒட்டு மொத்த இலங்கையர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், கல்வி கூடியவர்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் கூடுதலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கை எடுத்தவர்கள் என்று பார்த்தால் அது மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் என ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வளவு நாட்களும் வடக்கு கிழக்கிலிருந்து புலம்பெயரும் நிலை உருவானது அது பெரும்பாலும் யுத்த காரணங்களால், ஆனால் இப்பொழுது தெற்கிலிருந்து புலம்பெயர்தல் எதற்காக நடக்கிறது என்றால் அது முழுமையாக பொருளாதார காரணங்களால் தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.