பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்த புதிய யோசனை சொன்ன போரிஸ் ஜான்சன்
40,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமே இனி பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் யோசனை தெரிவித்துள்ளார்.
தனி கவனம் செலுத்த வேண்டும்
பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை கடும் உயர்வை பதிவு செய்துள்ள நிலையிலேயே, தனி கவனம் செலுத்த வேண்டும் என ரிஷி சுனக் அரசாங்கத்தை போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 745,000 புலம்பெயர் மக்க பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதன் பின்னர், அவசர நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்தும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையிலேயே குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கான சம்பள வரம்பை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜான்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
லம்பெயர் மக்களுக்கான சம்பள வரம்பை
பிரெக்சிட்டிற்குப் பிறகு எச்சரிக்கையுடன் இருக்க முடிவு செய்ததாக கூறும் போரிஸ் ஜான்சன், அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு புலம்பெயர் மக்களுக்கான சம்பள வரம்பை 26,000 பவுண்டுகள் என மட்டுமே வைத்தோம் என்றார்.
ஆனால் இது மிக மிக குறைவான சம்பள வரம்பு என்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது என்றார். இதனால் சம்பள வரம்பை 40,000 பவுண்டுகள் என அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, நேற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் தன்னை நம்பும்படி பிரதமர் ரிஷி சுனக் மக்களைக் கெஞ்சினார். மட்டுமின்றி தற்போதைய எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால், அடுத்தகட்ட நடவடிக்கையாக, சம்பள வரம்பு அதிகரிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.