மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்ட நான்கு நாட்களுக்குரிய மோதல் தவிர்ப்பு நிலை இன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிமுதல் நடைமுறையில் இருந்தாலும், வடக்கு காசா பிராந்தியத்துக்கு நுழைய முயன்ற பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியதால் ஒருவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
வீடு திரும்ப முயன்ற மக்களை இஸ்ரேலிய துருப்புக்கள் குறிவைத்ததாக வடக்கு காசா பகுதியில் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தீவிரமான போர் மண்டலம்
மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறையில் இருந்தாலும் வடக்கு காசா இன்னும் தீவிரமான போர் மண்டலமாக உள்ளதால், அந்தப் பகுதிக்கு மக்களை திரும்ப அனுமதிக்கப்போவதில்லையென இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
காசாவின் வடக்கே செல்ல முயன்ற பலஸ்தீனியர்கள் மீது நடத்தபட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் இஸ்ரேலிய பலஸ்தீன கைதிகளின் முதற்கட்ட விடுதலை நகர்வுகளுடன் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையேயான நான்கு நாட்களுக்குரிய மோதல் தவிர்ப்பு நிலை நகர்த்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேலுக்கு உள்ளே கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய் தாக்குதலுக்கு பின்னர் வெடித்த போரின் 49ஆவது நாளில் இந்த மோதல் தவிர்ப்பு வந்துள்ளது.
நேற்று (24) இஸ்ரேலின் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிமுதல் இந்த மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறையில் இருந்தாலும், வடக்கு காசா பிராந்தியத்துக்கு நுழைய முயன்ற பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியதால ஒருவர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்த துன்பியல் சம்வமும் இடம்பெறத்தான் செய்தது.
மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறைக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் கூட காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
இன்றைய முதல் நாளில் 13 இஸ்ரேலிய பணயக் கைதிகள் ஹமாஸால் விடுவிக்கப்படும் அதேநேரத்தில், மொத்தம் 39 பலஸ்தீனய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள்கள் எனவும் நான்கு நாட்களில் மொத்தம் 50 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது.
போர் தொடரும்
இந்த 4 நாட்களுக்குரிய மோதல்தவிர்ப்பு நிலை முடிவுக்கு வந்த பின்னர் போரை வலிமையுடன் தொடர்ப் போவதாக சுளுரைத்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இந்தப் போர் இன்னும் இரண்டு மாதங்ளுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காசாவின் தெற்கிலிருந்து வடக்கே செல்ல முயன்ற பலஸ்தீனியர்கள் சுடப்பட்டதைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தின் போது பலஸ்தீனியர்கள் தெற்கு காசாவவில் இருந்து வடக்கு காசாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.