;
Athirady Tamil News

மதுவிற்பனை இனி இப்படித்தான்? அமைச்சர் முக்கிய தகவல்!

0

‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட்ரா பேக்
ஈரோட்டில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் மதுவிற்பனை செய்வது குறித்து தமிழக அரசு நீண்ட நாட்களாக யோசித்து வருகிறது.

பாட்டில்களை கண்ட இடங்களில் போடுவதால் விலங்குகள், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காணவே டெட்ரா பேக் மதுவை விற்க அரசு திட்டமிட்டு வருகிறது. பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல மதுபானங்கள் சிறிய அட்டைபெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வது தான் டெட்ரா பேக் மது.

அமைச்சர் விளக்கம்
மக்கள் மது குடிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குழு வைத்து குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். எனவே மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதுமே கிடையாது.

பாட்டில் பயன்பாட்டை குறைத்தால், விவசாயிகளுக்கான பிரச்சினை தீரும். அதுதொடர்பான ஆய்வு அறிக்கை பெறப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தமிழகத்தில் மது விற்பனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அவரது அறிவுறுத்தலின் படியே 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஒரேநாளில் மது குடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முடியாது. பல நடவடிக்கைகளை புதிதாக செய்து வருகிறோம். அது வெற்றி பெறும்போது பிரச்சினைக்கு தீர்வு வரும். விதிமுறையை மீறி மது விற்பனை செய்யப்படுவதில்லை. அதுதொடர்பான புகார் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.